Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்.

 யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும், அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று மு...

 யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும், அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வைத்தியசாலையில் பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றமையால் இதனை பொலிஸார், பெற்றோர் மற்றும் சமூகத்தில் உள்ளவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களிடையே குறித்த போதைப்பொருள் பாவனை அதிகம் காணப்படுவதால் பாடசாலை அதிபர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவர் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் பாடசாலைகள் ஊடாக பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருளால் பாதிக்கப்படும் ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்கு பல இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.

வைத்தியசாலையில் மருந்துக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்படுபவர்களை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளிப்பதை விட போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு நாங்கள் வேலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.




ليست هناك تعليقات

Latest Articles