Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

காணாமல் போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு.

 பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில்,கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்க...

 பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில்,கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,

குறித்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த  24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16 ஆம் திகதி முதல் செயலிழக்க செய்யப்பட்டிருந்த நிலையில்,குறித்த மாணவனின் பெற்றோர் பேராதனைக்கு சென்று பார்வைவிட்டபோது அவர் எழுதிய கடிதமொன்று கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைவாக, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஆற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ليست هناك تعليقات

Latest Articles