Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

எரிபொருட்களின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் - ஹர்ஷ வெளியிட்ட தகவல்!

இலங்கையில் எரிபொருட்களின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைச் சூத...


இலங்கையில் எரிபொருட்களின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைச் சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உலகச் சந்தையிலுள்ள விலைகளுக்கேற்ப இலங்கையில் இந்த விலைமாற்றத்தை கொண்டுவரமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மக்கள் நெருக்கடியான நிலையில் இருக்கும் போது இந்த எரிபொருள் சலுகையை வழங்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

50 ரூபா இலாபம் 

எரிபொருள் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் செயற்படுவதாக அரசாங்கம் கூறியுள்ள போதிலும் வரி செலுத்தியதன் பின்னர் தற்போது ஒரு லீட்டர் எரிபொருளுக்கு 50 ரூபா இலாபம் அரசாங்கத்துக்குக் கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles