Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஜோசப் ஸ்டாலின் கைதை கண்டித்து யாழில் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில்ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...

 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில்ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(05) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஆகஸ்ட் 3ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து ஜோசப் ஸ்டாலினை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்திய போது ஆகஸ்ட் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையை தொடர்ந்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதைக் வன்மையாக கண்டிக்கிறோம், ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் போராட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய், ஸ்ரீலங்கா அரசாங்க பாசிசவாதத்தை எதிர்த்து நாம் தொடர்ந்தும் போராடுவோம் போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 






No comments

Latest Articles