Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி.

 வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டு பெற குடிவரவு திணைக்களத்தில் விசேட கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இலங்கை வ...

 வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டு பெற குடிவரவு திணைக்களத்தில் விசேட கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து புதிய விசேட கவுன்ட்டர் ஒன்றை திறப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) அனுமதியளித்தார்.

புதிய நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் நேற்று முதல் கவுன்ட்டர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

கடவுச்சீட்டு வழங்குவதற்கான வழமையான கோரிக்கைகள் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த விசேட கவுன்டர் திறக்கப்பட்டது.

இதன் மூலம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் இருந்து தமது வேலை தொடர்பான கடிதத்தைப் பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரர்கள் தமது ஆரம்பச் செயற்பாடுகளை நிறைவுசெய்து, விசேட கவுன்டரில் ஆவணத்தை வழங்குவதன் மூலம் தமது கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும். 


No comments

Latest Articles