Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் விசமிகளால் மாடொன்றுக்கு நேர்ந்த துயரம்.

 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாடொன்றின் காலை விஷமிகள் துண்டாடியதுடன்,மற்றுமொரு காலிலும் காயத்தை ஏ...

 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாடொன்றின் காலை விஷமிகள் துண்டாடியதுடன்,மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் வட்டுக்கோட்டை மூளாய்,முன்கோடை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வரும் நிலையில் வழமை போன்று தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார்.

மாடுகளை அவிழ்க்க சென்ற போது பசுவின் கால் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் மற்றுமொரு காலில் காயம் ஏற்பட்டதுடன் குறித்த மாடு இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது.

மாட்டினை அங்கிருந்து மீட்ட போதிலும் மாடு வலியினால் உணவு உட்கொள்ளாது இருந்த நிலையில் அது தொடர்பில் வட்டுக்கோட்டை கால் நடை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments

Latest Articles