2022 ஜூலை 20 ஆம் திகதி வரை ஒரு நாள் சேவையின் கீழ் இணையத்தளத்தின் மூலம் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு...
2022 ஜூலை 20 ஆம் திகதி வரை ஒரு நாள் சேவையின் கீழ் இணையத்தளத்தின் மூலம் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாளாந்தம் விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்ப எண்ணிக்கை அதிகபட்ச வரம்பை மீறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுகள்
நிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பம்: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி முதல் மீண்டும் ஒரு நாள் சேவையின் கீழ் இணையத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 2,500 ஆக உள்ளதாகவும் ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.




ليست هناك تعليقات