காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழக க...
காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆம் வருட இளங்கலை மாணவர்கள் 4 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களாவார்.
சம்பவத்தின் பின்னணி
பல்கலைக்கழக மாணவி உட்பட 4 மாணவர்கள் கைது! வெளிவரும் பின்னணிபல்லேகல சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் துடுப்பாட்ட போட்டியின் போது பல்கலைக்கழக மாணவி உட்பட்ட நான்கு மாணவர்கள் குடிபோதையில் வலுக்கட்டாயமாக மைதானத்திற்குள் நுழைய முயன்றபோதே பதற்றம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது, காவல்துறையினரை தகாத வார்த்தைகளில் பிரயோகித்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேரை பல்லேகல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 28 வயதுடைய, அக்குரம்பொட, குருநாகல், கொஸ்லந்த மற்றும் கெக்கிராவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
அவர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.



ليست هناك تعليقات