Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!

 பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்தில் தனது சகோதரனை கை கோடரி மற்றும் கத்தியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்துள்ளார். இக்...

 பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்தில் தனது சகோதரனை கை கோடரி மற்றும் கத்தியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்துள்ளார்.

இக்கொலை சம்பவம் நேற்றிரவு (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் குழந்தையை சகோதரன் வீட்டில் இருந்த நாய் கடித்ததில் ஏற்பட்ட தகராறில் சந்தேக நபரின் மனைவி கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த சந்தேகநபர் கோடரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த கொலையை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் எம்பிலிப்பிட்டிய, முலஎடியாவல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பனாமுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


ليست هناك تعليقات

Latest Articles