Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை!

மாவீரர் நாள் நினைவேந்தல்களுக்கு முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் நீதிமன்ற தடையுத்தரவுகளை காவல்துறையினர் பெற்றுள்ள நிலையில், யாழ்ப்...

மாவீரர் நாள் நினைவேந்தல்களுக்கு முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் நீதிமன்ற தடையுத்தரவுகளை காவல்துறையினர் பெற்றுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளால் இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள் சார்பில் இந்த மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் காவல்துறை நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவாக காவல்துறையினரின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின்படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

இந்த மனு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நாளைமறுதினம் 21ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 28ஆம் திகதிவரை ஒரு வாரத்துக்கு நினைவேந்தல்களை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles