Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

31.10.2021 இன்றைய நாள் எப்படி.

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை....



மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். இளைய சகோதரர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

உற்சாகமாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள்.நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. பிற்பகலுக்குமேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்கள் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். துர்கையை வழிபட சிரமங்கள் குறையும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். காரியங்களில் பொறுமை மிக அவசி யம். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை யும் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் எப்போதும்போல் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று முருகப்பெருமானை வழிபட காரிய அனுகூலம் உண்டாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். என்றாலும் தேவையான பணம் இருப் பதால் சமாளிப்பதில் சிரமம் இருக்காது. பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.

துலா ராசி அன்பர்களே!

தந்தையால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். மனஇறுக் கம் நீங்கி நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் பிற்பகலுக்குமேல் ஈடுபடவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பதற்றம் இல்லாமல் செயல்படவேண்டிய நாள். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் வழக்கம்போல நடை பெறும். பணியாளர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் செலவுகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். அவ்வப்போது சோர்வு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே மூன்றாவது நபர்களின் தலையீட்டைக் கண்டிப் பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களின் வருகையால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவர் களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அம்பிகை வழிபாடு அல்லல் தீர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

மனதில் அவ்வப்போது சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமை அவசியம். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

கும்ப ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து வரும். சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற் சிகள் சாதகமாகும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகளை முறியடிப்பீர்கள். துர்கை வழிபாடு நலம் சேர்க்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

மீன ராசி அன்பர்களே!

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபா ரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.



No comments

Latest Articles