Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

என்னை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள் - விமல்

பணம் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் திருநாவுக்கரசு கொடுத்த புகாருக்கு நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விமலிடம் தயாரிப்பாளர் திருநாவ...

பணம் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் திருநாவுக்கரசு கொடுத்த புகாருக்கு நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.


நடிகர் விமலிடம் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு என்பவர் ரூ.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும், அதை திருப்பி தரவில்லை என்றும் புகார் கொடுத்தார். இதற்கு பதில் அளித்துள்ளார் விமல்.


விமல் கூறியதாவது, என்னை பற்றிய தவறான செய்திகளை சமூக ஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. 


என் வளர்ச்சியை பிடிக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.


திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 


அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும் என்று திட்டவட்டமாக நடிகர் விமல் கூறி இருக்கிறார்.




No comments

Latest Articles