Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட் வெடிகுண்டு தாக்குதல் - 3 பாதுகாப்பு படையினர் பலி

மேற்கு சிங்பும் மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் நேற்று காலை பாதுகாப்பு படையினர், நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ...

மேற்கு சிங்பும் மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் நேற்று காலை பாதுகாப்பு படையினர், நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.


இவற்றில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள மேற்கு சிங்பும் மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் நேற்று காலை பாதுகாப்பு படையினர், நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


சி.ஆர்.பி.எப்., மாநில அதிரடிப்படை, ஜார்கண்ட் ஜாகுவார் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் இதில் ஈடுபட்டனர். அப்போது, ஓரிடத்தில் நக்சலைட்டுகள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், 3 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். அவர்கள் சிறப்பு அதிரடிப்படை, ஜார்கண்ட் ஜாகுவார் ஆகிய படைகளை சேர்ந்தவர்கள் ஆவர்.


மேலும், சி.ஆர்.பி.எப்., ஜார்கண்ட் ஜாகுவார் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 2 பேர் காயமடைந்தனர்.




No comments

Latest Articles