Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வார பலன்கள் - 19.3.2021 முதல் 25.3.2021 வரை

மேஷம் 19.3.2021 முதல் 25.3.2021 வரை எதிர்பார்த்த பணவரவு இல்லாவிட்டாலும், கடன் வாங்காத அளவுக்கு வரவு இருக்கும். தொழில் புரிபவர்கள் படிப்படியா...



மேஷம் 19.3.2021 முதல் 25.3.2021 வரை


எதிர்பார்த்த பணவரவு இல்லாவிட்டாலும், கடன் வாங்காத அளவுக்கு வரவு இருக்கும். தொழில் புரிபவர்கள் படிப்படியாக முன்னேறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட திடீர் பயணம் உண்டாகும். நினைத்த காரியங்களை முடிக்கும் ஆற்றல் பிறக்கும். வாக்குவாதத்தால் தொல்லைகள் வரலாம். இந்த வாரம் வியாழக் கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாத்தி வழிபாடு செய்யுங்கள்.


ரிஷபம் 19.3.2021 முதல் 25.3.2021 வரை


நினைத்த காரியங்களை நினைத்தபடி சாதிப்பீர்கள். தொழிலில் இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமை நீங்கும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தில் புதிய திருப்பம் உண்டாகும். தொழில் விரிவாக்கம் செய்ய எண்ணு பவர்கள், நிதானமாக செய்யுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் வாய்க்கும். இந்த வாரம் புதன் கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.


மிதுனம் 19.3.2021 முதல் 25.3.2021 வரை


எதிர்பாராத செலவுகளால் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். இருப்பினும் உதவி செய்ய பலரும் முன்வருவர். சிலருக்கு சுபச் செலவுகள் ஏற்படும். தொழில் செய்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், அதிகாரிகளின் விரோதங்களை சந்திக்கலாம். உங்கள் முயற்சி கட்டாயம் கைகொடுக்கும். இந்த வாரம் முழுவதும் விநாயகருக்கு அருகல்புல் மாலை சாத்தி வழிபட தடைகள் அகலும்.


கடகம் 19.3.2021 முதல் 25.3.2021 வரை


பகை பாராட்டியவர்கள், இனிமேல் நட்பு பாராட்டுவர். வழக்கமான பணியில் வெற்றி வந்து சேரும். திட்டமிட்டு செயல்படாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதுவரை உங்களை அலைக்கழித்து வந்த வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும். வீடுகளை புதுப்பிக்க எண்ணுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். இந்த வாரம் வியாழக்கிழமை நவக்கிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கு தீபமேற்றி வழிபடுங்கள்.


சிம்மம் 19.3.2021 முதல் 25.3.2021 வரை


சுப காரியம் ஒன்று முடிவாகும் தருணம் இது. சேமிப்புகள் நல்லவிதத்தில் செலவழியும். நீண்ட நாட்களாக இருந்த கடன் தொல்லை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு, சகப் பணியாளர்களால் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறக் கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை கந்தசஷ்டி கவசம் பாடி முருகனை வழிபாடு செய்யுங்கள்.


கன்னி 19.3.2021 முதல் 25.3.2021 வரை


குடும்ப உறவுகள் பலப்படும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல திருப்பத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுக்காதீர்கள். உணவில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். இந்த வாரம் சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.


துலாம் 19.3.2021 முதல் 25.3.2021 வரை


பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பூர்வீகச் சொத்து உங்களிடமே வந்துசேரலாம். ஜாமீன் போடுவதை தவிர்த்திடுங்கள். ஆடை- ஆபரண சேர்க்கை உண்டு. எந்த முடிவையும் உங்களுக்கு நெருக்கமானவரிடம் கலந்து ஆலோசித்து எடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் உதிரி வருமானம் கிடைக்கும். இந்த வாரம் புதன்கிழமை பெருமாள் ஆலயம் சென்று கருடபகவானை வழிபட்டு வாருங்கள்.


விருச்சகம் 19.3.2021 முதல் 25.3.2021 வரை


சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறாமல் போகலாம். குடும்பத்தில் சிறு சிறு சல சலப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க எண்ணிய ஒருவரை சந்திப்பீர்கள். நிதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். உத்தியோக மாற்றத்தை தேடிச் செல்ல வேண்டாம். கணவன்- மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.


தனுசு 19.3.2021 முதல் 25.3.2021 வரை


எதிர்பாராத வகையில் தன வரவு வந்து சேரும். குடும்பத்தில் பலவித சமரச முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத சோதனைகள் தேடி வரலாம். நட்பு வட்டாரங்களில் அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். பெண்கள் கவனத்துடன் இருங்கள். இந்த வாரம் வியாழக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுங்கள்.


மகரம் 19.3.2021 முதல் 25.3.2021 வரை


கொடுக்கல்-வாங்கலில் இருந்த பிரச்சினை கள் விலகும். நீண்ட நாட்களாக வராத பணம் வசூலாகி மகிழ்ச்சிப்படுத்தும். பிள்ளைகளின் கல்வியில் மேன்மையை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, அன்னிய மொழி பேசுபவர் களால் தொல்லை உண்டு. சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல் வெற்றியை தனதாக்கிக் கொள்வீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு விளக்கேற்றுங்கள்.


கும்பம் 19.3.2021 முதல் 25.3.2021 வரை


கடந்த கால பிரச்சினைகள் தீரும். தொழிலை விரிவுபடுத்துவது, வேறு தொழில் செய்வது என்று சிந்திக்க வேண்டாம். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், நிதானத்தை கடைப்பிடியுங்கள். அரசியலில் உள்ளவர்கள் எதிரிகளை ஜெயித்துக் காட்டுவீர்கள். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள், அதற்கான முயற்சியை மேற்கொள்வீர்கள். இந்த வாரம் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்குங்கள்.


மீனம் 19.3.2021 முதல் 25.3.2021 வரை


நன்மை தரக்கூடிய அம்சமாக பல விஷயங்கள் நடைபெறும். இதுவரை இருந்த தொல்லை கள் விலக ஆரம்பிக்கும். தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும், வருவாய் ஓரளவே திருப்தி தரும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. சில நேரங்களில் அலைச்சல்களை தவிர்க்க முடியாது. புதிய முடிவுகளை தைரியமாக எடுங்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அம்மன் ஆலயம் சென்று அரளிப்பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

No comments

Latest Articles