ஈழத்து திரைப்பட இயக்குனரும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவை சேந்தவருமான திரு நவரட்ணம் கேசவராஐன் அவர்கள் 09.01.2021 (சனிக்கிழமை...
நவரட்ணம் கேசவராஜ் . அரியாலை மத்தி, தற்காலிக வசிப்பிடம் சுதுமலை , மானிப்பாய். ஈழத்திரைப்பட இயக்குனரான இவர் 1986ம் ஆண்டு தாயகமே தாகம், மரணம் வாழ்வின் முடிவல்ல போன்ற படங்களை இயக்கினார் அதன் விளைவாக தேசிய தலைவரின் பாராட்டை பெற்றதுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டார்.
பல வீதி நாடகங்கள் மேடை நாடகங்களை தயாரித்து வழங்கிய இவர் பிஞ்சுமனம், திசைகள் வெளிக்கும், கடற்புலிகளின் 10ஆண்டு நிறைவை முன்னிட்டு கடலோரகாற்று, அம்மா நலமா போன்ற படங்களை இயக்கியுள்ளதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் அப்பா வருவார் போன்ற பல குறும்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.
2009 இன் பின்னர் முன்னால் போராளிகள் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு பனைமரக்காடு திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எமது இணைய நிர்வாகம் இறைவனைபிரார்த்திக்கின்றது.



No comments