Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்...

 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றுவருகின்றன.


சுகாதார பிரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்துசெல்வதுடன் மாணவர்கள் கைகளை தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


மாணவர்களை அழைத்துவரும் பெற்றோரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறு பாடசாலைகளுக்கு சமூகமளித்ததை காணமுடிந்தது.


புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள மொழியில் 248,072 மாணவர்கள், தமிழ் மொழியில் 83,622 மாணவர்கள் தோற்றுகின்றனர்.



No comments

Latest Articles