யாழ்.புத்துார் கிழக்கு பகுதியில் வீட்டு வளவுக்குள் குழி வெட்டி குழிக்குள் நடைபெற்ற மதுபான விற்பனையை பொலிஸார் மடக்கியுள்ளனர். பெருமளவு மதுபான...
பெருமளவு மதுபான போத்தல்களை மீட்டுள்ளதுடன், ஒருவரை கைது செய்திருக்கின்றனர்.
காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் நடாத்திய சுற்றிவளைப்பின்போதே இந்த மதுபான வியாபாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஊரடங்கின் போதும் இவ்விற்பனை நடந்திருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டிருப்பது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு ஆத்திரமும் வருகின்றது என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.



No comments