இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 18 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 981 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 415 நோயாளிகள் 07 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே மேலும் 209 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 22 வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆகும்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 533பேர் முப்படையினர் எனவும், அவர்களில் 521 பேர் கடற்படையினர் என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடற்படையினரில் 189 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், 332 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 11 இராணுவத்தினரும், ஒரு விமானப்படைச் சிப்பாயும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முப்படையினருடன் நெருக்கமாகப் பழகிய 36 உறவினர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments