Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

துரையப்பா மைதானம் அதிர காத்திருக்கும் NEPL இறுதி சமர் நாளை மறுதினம்….!!

நடப்பாண்டிற்கான வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரின் மாபெரும் இறுதி சமர் நாளை மறுதினம் (05/10/19) சனிக்கிழமை இரவு 07. 00 மணியளவில் யாழ் துரையப...

நடப்பாண்டிற்கான வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரின் மாபெரும் இறுதி சமர் நாளை மறுதினம் (05/10/19) சனிக்கிழமை இரவு 07. 00 மணியளவில் யாழ் துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ் இறுதி போட்டியில் தனேஸ் தலைமையிலான நடப்பு சம்பியன் ரில்கோ கொங்கியூரஸ் அணியை எதிர்த்து ஞானரூபன் தலைமையிலான வல்வை எப்.சி அணி மோதவுள்ளது.

பெருந்திரளான ரசிகர்கள் மத்தியில் இப் போட்டி இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுவதோடு, ரசிகர்களுக்கு விருந்து படைக்க கூடிய ஆட்டமாக இவ் ஆட்டம் அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இவ் சுற்றுப்போட்டியில் வட, கிழக்கினை சேர்ந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகள் களமிறங்கியிருத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments

Latest Articles