Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வரலாற்றில் எத்தனை மர்மங்களோ, காந்தியிடம் எத்தனை கணக்குகளோ!

காந்தி அஹிம்சா மூர்த்தி, அரிசந்திரனின் அரைவடிவம் என எல்லாமும் இருக்கட்டும், அவரின் கொள்கையும் அகிம்சையும் நேரம் தவறாமையும் ஊழலில்லாமையும் ...

காந்தி அஹிம்சா மூர்த்தி, அரிசந்திரனின் அரைவடிவம் என எல்லாமும் இருக்கட்டும், அவரின் கொள்கையும் அகிம்சையும் நேரம் தவறாமையும் ஊழலில்லாமையும் நல்ல விஷயம்.

ஆனால் வ.உ.சியின் வரலாற்றில் காந்தி குனிந்து நிற்கின்றார், ஒருமாதிரியான குற்றசாட்டு அவர்மேல் உண்டு, அதற்கு வரலாற்றிலும் பதில் இல்லை காந்தியின் சத்திய சோதனையிலும் பதில் இல்லை.

ஏன் அப்படி செய்தார் காந்தி? மகாத்மா அப்படி துர் ஆத்துமமாக ஏன் நடந்தது?

வஉசி  மிகபெரும் சுதந்திர போராட்ட வீரராகவும், பெரும் தமிழறிஞராகவும் இருந்திருக்கின்றார்காந்திக்கு முன்பு சுதந்திர வெறியினை பற்றவைத்ததில் தனித்து நிற்கின்றார். வடக்கே திலகரும் தேற்கே சிதம்பரனாரும் தனிபெரும் அடையாளங்களாக நிற்கின்றனர், தேற்கே சிதம்பரனார், பாண்டித்துரை தேவர் என பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக வலம் வருகின்றனர்கப்பல் விட்ட சிதம்பரனாரை வெள்ளையன் குறிவைத்துவிடுகின்றான். 

இவரை விட்டால் பெரும் ஆபத்து என இல்லாத வழக்குகளில் உலகெல்லாம் எதிரொலிக்கின்றது, அப்பொழுது தென்னாபிரிக்க தமிழர்கள் காந்தியிடம் 357 ரூபாய் கொடுத்து அனுப்புகின்றார்கள், அது இன்று பல லட்சங்களுக்கு சமம், வ.உ.சிக்கும் தகவல் சொல்கின்றார்கள்

வ.உ.சி வாழ்ந்து கெட்ட பெரியவர் என்பதால் பணத்தை உடனே கேட்காமல் காத்தே இருக்கின்றார் பணம் வரவில்லை ஒரு வருடம் கழித்து காந்தி வ உசிக்கு கடிதம் எழுதுகின்றார், அந்த பணத்தை நான் தந்துவிட்டேனா? 

எப்படி இருக்கும் வ உசிக்கு?

அப்பணத்தை தாமதித்து இருவருடம் கழித்து கொடுக்கின்றார் காந்தி, அதாவது பலமுறை வஉசி வறுமை தாங்காமல் கடிதம் எழுதி கெஞ்சிய பின் அதன் பின்னும் வெள்ளையன் நெருக்கடியில் நடுத்தெருவிற்கு வருகின்றார் வ உசி, போராட்டம் காந்தி பின்னால் செல்கின்றது, நான் தான் சீனியர் என வந்து மல்லுகட்டாமல் ஒதுங்கி நிற்கின்றார் வ உசி.

அவரின் மொத்த குடும்பமும் பட்டினி கிடக்கும் கொடுமை அறிந்து மறுபடியும் தென்னாப்ரிக்க தமிழர்கள் 5000 ஆயிரம் திரட்டி காந்தியிடம் கொடுத்தனுப்புகின்றார்கள்அப்பணம் மறுபடியும் தாமதமாகின்றது.

 வேடியப்பன் என்றொருவர் வந்து வ உசியிடம் கேட்டபின்புதான் அப்படி பணம் கொடுத்தனுப்பிய விஷயமே வ உசிக்கு தெரிகின்றது, காந்தி ஒருவார்த்தையும் வ.உ.சிக்கு சொல்லவில்லை காந்திக்கு கடிதம் எழுதுகின்றார் வ.உ.சி , காந்தி பதில் அனுப்பவில்லை, மறுபடி மறுபடி வஉசி எழுதியும் பலனில்லை, மறுபடி வஉசி தென்னாபிரிக்க தமிழரின் கடித்தத்தோடு நேரே சென்று கெஞ்சுகின்றார்.

வ.உ.சியிடம் காந்தி அப்பணத்தை செலவழித்துவிட்டதாகவும், இன்னொரு வணிகரிடம் வாங்கிகொள்ளுமாறும் அனுப்புகின்றார், அந்த வணிகர் வட்டியோடு கொடுக்க முனைகின்றார், தடுத்து 5000 மட்டும் வாங்கிய வ உசி சொல்கின்றார்.

"காந்தி செய்த தவறுக்கு நீங்கள் ஏன் வட்டி கட்ட வேண்டும்?" ,கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் என்பது இதுதான். காந்திக்கும் அந்த வணிகனுக்கும் என்ன உறவு என்பது பற்றி ஒரு வரலாற்று குறிப்புமில்லை. ஆனால் உறவு இருந்திருக்கின்றது.

பல இடங்களில் படித்த செய்தி தான், காந்திக்கு வஉசி மேல் என்ன கோபம்?வஉசி கப்பல் ஓட்டியதை கண்ட பின், பெரும் மக்கள் புரட்சி காந்தி ஏன் அவசரமாக இந்தியா வந்தார்?

இருமுறையும் பணம் தாமதித்த அவசியம் என்ன? நிச்சயம் காந்தி மறந்திருக்க முடியாது, ஏதோ பெரும் காரணம் இருக்க வேண்டும்? தடுத்த சக்தி எது? அல்லது காந்திக்கு வஉசி மேல் என்ன கோபம் என்ன‌?

அடுத்த கட்ட போராட்டத்தில் வ உசியினை காந்தி ஏன் சேர்த்து கொள்ளவில்லை? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. இந்த சம்பவத்தை பற்றி காந்தி சத்திய சோதனையில் ஏதும் சொன்னதாகவும் தெரியவில்லை ஏன் இப்படி செய்தார் காந்தி??

அவர் மீது இப்படி ஏகபட்ட குற்றசாட்டுகள் உண்டு, நிச்சயமாக வ.உ.சி காந்திக்கும் நேரடி பகை இல்லை, பின்னும் அவரை அலையவிட்டிருக்கின்றார் என்றால் ஏதோ இருந்திருக்கின்றது.  யாரோ சொல்லித்தான் காந்தி இப்படி
எல்லாம் நடந்திருக்க வேண்டும்

சொல்லிகொடுத்தவன் இந்தியனாக இருக்க வாய்ப்பே இல்லை..

பழம்பெரும்  எழுத்தாளர் ஒருமுறை சொன்னார், "அன்று காந்தி சுட்டுக் கொல்லப்படவில்லை என்றால் இத்தேசம் இன்னும் மகா மோசமாயிருக்கும்" அப்படித்தான் போலிருக்கின்றது, வரலாற்றில் எத்தனை மர்மங்களோ, காந்தியிடம் எத்தனை கணகுகளோ..


No comments

Latest Articles