ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது நல்லதொரு செயற்பாடு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண...
ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது நல்லதொரு செயற்பாடு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்
அத்தனகல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியின் வாக்குகளை கட்சிக்குள்ளேயே நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் சுயமாக தீர்மானங்கள் எடுப்பதாகவும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடன் இணைவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
இவ்வாறான செயற்பாடுகள் தனது கொள்கைக்கு ஒத்துவராததால் தான் அவ்வாறான கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments