Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வீதி விபத்தினால் தடைப்பட்ட திருமணம்! விசாரணையில் மணமகன்...?

இன்றைய தினம் (11) திருமணம் இடம்பெற இருந்த நிலையில் மணமகன் ஏற்படுத்திய விபத்து காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டுள்ளமை இரு வீட்டாரிடையே பெரும்...

இன்றைய தினம் (11) திருமணம் இடம்பெற இருந்த நிலையில் மணமகன் ஏற்படுத்திய விபத்து காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டுள்ளமை இரு வீட்டாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலமடை பகுதியில் இன்று (11) திருமணம் நடைபெறவிருந்த இளைஞர் ஒருவர், அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் ஏற்பட்ட விபத்தில் துப்புரவு தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். இதனால் அவரது திருமணம் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்...

மதுரை மேலமடையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் 24 வயதுடைய மகன் ஜெகந்நாத் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா முருகன் கோயிலில் வைத்து அவருக்கு இன்று (11) திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக அவர் தனது நண்பர்களுடன் Ford காரில் வந்தார். கார் ஓட்டி பழகிய சிறிது நாள்களிலேயே அதை அவர் வேகமாக செலுத்தியதாக கூறப்படுகிறது. பஞ்சாயத்து அலுவலக பகுதியில் கார் வந்தபோது, அங்கு நின்ற பால் வாகனம் மீது முதலில் கார் மோதி விபத்திற்குள்ளானது.

இதையடுத்து இருதரப்புக்கும் வாக்குவாதம் மூண்டது. பின்னர் சமரசம் ஏற்படவே, காரை வேகமாக எடுத்துக் கொண்டு ஜெகந்நாத் சென்றுள்ளார்.

அப்போது சாலையோரம் கூட்டமாக நின்ற துப்புரவு தொழிலாளர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது. இதில் துப்புரவு தொழிலாளி தமிழரசன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் 3 பேர் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தின் காரணமாக, ஜெகந்நாத்துக்கு இன்று (11) நடைபெறுவதாக இருந்த திருமணம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Latest Articles