Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஜரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு தொடரும் சோகம்; யாழ் இளைஞனை தொடர்ந்து மற்றொரு இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

வடகிழக்கு சுவிஸ் நகரமான செயின்ட் கேலன் நகரில் 22 வயதான இலங்கை சுற்றுலா பயணியான இளைஞன் செவ்வாய்க்கிழமை குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். ...


வடகிழக்கு சுவிஸ் நகரமான செயின்ட் கேலன் நகரில் 22 வயதான இலங்கை சுற்றுலா பயணியான இளைஞன் செவ்வாய்க்கிழமை குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை 7:30 மணியளவில் குறித்த குளத்துக்குள் குளிக்கச்சென்ற இளைஞன் மீளவும் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குளத்தில் பல டசின் நீச்சல் வீரர்கள் உடனடியாக சுற்றுலாப்பயணியைத் தேடத் தொடங்கினர்.

துரதிர்ஷ்டவசமாக, அந்த இளைஞனை சுமார் 30 நிமிட தேடுதலுக்குப் பின்னர் உயிரற்ற நிலையில் மீட்க முடிந்தது. அவர் கரையிலிருந்து ஆறு மீற்றர் தொலைவில் 3-4 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். முதற்கட்ட கண்டுபிடிப்புகளின்படி, அவருக்கு நீந்தத் தெரியாது, தனியாக குளத்துக்குள் சென்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் மொத்தம் 37 பேர் நீரில் மூழ்கினர் (புள்ளிவிவரங்கள் ஒக்டோபர் 8 வரை மட்டுமே) 2017 இல் 41 பேர் என தெரிவிக்கப்படுகிறது..

கடந்த வாரமும் யாழ்ப்பாணம் தின்னவேலியைச்சேர்ந்த இளைஞன் சுவிஸில் ஆறு ஒன்றில் குளிக்கச்சென்ற நிலையில் பாறையில் தவறுண்டு ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles