Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 6 உறுப்பினர்கள் இலங்கை ஊடாக தமிழகத்திற்கு

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழு ஒன்றின் 6 உறுப்பினர்கள் இலங்கை ஊடாக தமிழகத்திற்கு சென்றுள்ளதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து, தமி...

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழு ஒன்றின் 6 உறுப்பினர்கள் இலங்கை ஊடாக தமிழகத்திற்கு சென்றுள்ளதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து, தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளது. 

பாகிஸ்தானில் செயற்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் 6 உறுப்பினர்கள் தமிழகத்தின் கோவைக்கு வந்துள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. 

இந்த குழுவில் ஒரு பாகிஸ்தான் நாட்டவரும் 5 இலங்கையர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்களில் இலியாஸ் அன்வர் என்ற பாகிஸ்தான் தீவிரவாதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காக கோயம்புத்தூர் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.


No comments

Latest Articles