Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

350 மீற்றர் பள்ளத்தாக்கில் முச்சக்கர வண்டியொன்று குடை சாய்ந்து இருவர் உயிரிழப்பு!

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். எல்ல – கபரகல பிரதேசத்தின், ராவின்ன என்ற இடத்தில...


இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

எல்ல – கபரகல பிரதேசத்தின், ராவின்ன என்ற இடத்தில் சுமார் 350 மீற்றர்  பள்ளத்தாக்கில் முச்சக்கர வண்டியொன்று குடை சாய்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 35 வயதுடைய தந்தையும், 8 வயதுடைய மகனும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த 8, 12 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات

Latest Articles