மஹியங்கனை பகுதியில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இரண்டரை வருட காலம் வெளிநா...
மஹியங்கனை பகுதியில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இரண்டரை வருட காலம் வெளிநாட்டில் வேலைசெய்து விட்டு நாடு திரும்பிய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய மனைவி நேரடியாக கம்பளையில் உள்ள அவரது தாயாரின் வீட்டிற்குச் சென்று ஒரு வாரம் கழிந்த பின்னரே கணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்
இதனால் ஏற்ட்ட வாய் தர்க்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மஹியங்கனை ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments