ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ - Intelligence Quotient) அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரிட்டனில் வாழும் ...
ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ - Intelligence Quotient) அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரிட்டனில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார்.
இதன் மூலம், உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் எனும் பெருமையை ஹரிப்பிரியா பெற்றுள்ளார்.
இவர் கல்வி மட்டுமின்றி, பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றார்.
உலகின் புகழ்பெற்ற அறிவுக்கூர்மை சோதனை கூடங்களில் ஒன்றாக திகழும் பிரிட்டிஷ் மென்சாவின், 'காட்டல் III பி (Cattell III B)' எனும் தேர்வில் பங்கேற்ற பிரிட்டன்வாழ் தமிழ்ச் சிறுமியான ஹரிப்பிரியா, அத்தேர்வின் அதிகபட்ச சாத்தியமுள்ள மதிப்பீடான 162 பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
அதாவது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் போன்ற பிரபல அறிவியலாளர்களின் அறிவுக்கூர்மை மதிப்பீட்டை விட இவர் இரண்டு எண்கள் அதிகமாக பெற்றுள்ளார்.
அதே போன்று, பிரிட்டிஷ் மென்சாவின் மற்றொரு அறிவுக்கூர்மை தேர்வான 'கல்ச்ர் பார் (Culture Fair Scale)' என்பதிலும் அதிகபட்ச மதிப்பீடான 140ஐ பெற்று அசத்தியுள்ளார்.
பிரிட்டனின் ரெட்டிங் பகுதியில் வசித்து வரும் ஹரிப்பிரியாவுக்கு அங்குள்ள நாட்டின் மிகப் பெரிய பள்ளியில் தனது கல்வியை தொடருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் விசா முடிவடைய உள்ளதால் இங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.



No comments