இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க அவுஸ்திரேயாவிற்கு குடிபெயரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் பங்களாத...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க அவுஸ்திரேயாவிற்கு குடிபெயரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் பங்களாதேஸ் அணியுடனான தொடரின் பின்னர் இவர் தமது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயரவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அவர் ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளதாகவும் சர்வதேச விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது லசித் மாலிங்க அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள நிலையில், பங்களாதேஸ் உடனான தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் அவருக்கு அங்கு பயிற்றுவிப்பாளர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச விளையாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.




No comments