Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் ஆவா குழுவினராம் – விசேட நடவடிக்கை என்கிறது பொலிஸ் தரப்பு!

மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என பொலிஸ் ஊட...


மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மானிப்பாய் – இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார் எனவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறி்ப்பிட்டார்.

இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில், “மானிப்பாய் பொலிஸ் பிரிவில் மானிப்பாய், இணுவில் வீதியில் ஆவா குழு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதனால் மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் மற்றும் கொடிகாமம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் இணைந்து ஆவா குழுவைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை எடுத்திருந்தது.

சிறப்பு அணி மானிப்பாய் – இணுவில் வீதியில் களமிறக்கப்பட்டிருந்தது. ஆவா குழுவைச் சேர்ந்தோர் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களை வழிமறித்துக் கைது செய்ய பொலிஸார் முற்பட்டனர். எனினும் தப்பிக்க முற்பட்ட போது ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றவர் படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கஜேந்திர வாள் ஒன்று சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் நால்வர் தப்பித்துள்ளனர். அவர்களைத் தேடி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பவத்தையடுத்து மானிப்பாய் பொலிஸாருடன் இணைந்து ஏனைய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸாரும் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Latest Articles