Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

`தோனி மீண்டும் 20 வயதுக்குத் திரும்பப் போவதில்லை' - விமர்சகர்களை விளாசும் கபில்தேவ்!

நடப்பு உலகக் கோப்பைத் தொடர் குறித்தும் வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும் கபில் தேவ் பேசியுள்ளார். ‘தோனி...’ இந்தப் பெயர் இந்தி...



நடப்பு உலகக் கோப்பைத் தொடர் குறித்தும் வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும் கபில் தேவ் பேசியுள்ளார்.


‘தோனி...’ இந்தப் பெயர் இந்தியக் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியது எனத் தோனியின் பிறந்த நாளையொட்டி இந்த கேப்ஷனுடன் ஐசிசி ட்வீட் செய்திருந்தது. இந்தப்பெயர் கடந்த சில நாள்களாக விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. ஸ்லோ இன்னிங்ஸ் என்ற வார்த்தையைக் கொண்டு கடுமையாகப் பேசி வருகின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது தோனி விளையாடிய விதம் திருப்திகரமாக இல்லை என சச்சின் பேசியது இந்த விவகாரம் சூடு பிடித்தது. ஆனால் அதற்கு அடுத்த போட்டியில் தோனியின் இன்னிங்ஸை அவர் பாராட்டி பேசினார்.


இதற்கெல்லாம் உச்சமாக அம்பதி ராயுடுவின் ஓய்வுக்கு தோனி தான் காரணம் என்றார் யுவராஜின் சிங் தந்தை. இந்நிலையில் தோனிக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசியுள்ளார். மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடர் குறித்தும் வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும் கூறியுள்ளார்.

“தோனி ,கோலி இருவருக்குமான அணுமுறை என்பது வேறு. கோலி ஆக்ரோஷமாகச் செயல்படுபவர். இங்கிலாந்தில் இந்திய அணியைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். தோனி மீது தற்போது நியாயமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அது தேவையில்லாதது. முன்னணி வீரர்களுக்கு இது நடப்பது தான். அவர் மீண்டும் 20 வயதுக்குத் திரும்பப் போவதில்லை.


உலகக் கோப்பை போன்ற தொடர்களின் போது ரீவ்யூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக நாக்- அவுட் ஸ்டேஜ்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒரு ரிவ்யூவை கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. கிரிக்கெட்டில் ஒரு ரன் அல்லது ஒரு விக்கெட் கூட போட்டியையே மாற்றும். இந்த உலகக்கோப்பை தொடரில் பும்ரா மட்டுமல்ல ஷமியும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு பும்ரா இந்த நிலையை அடைவார் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவரால் தொடர்ந்து 145 கிமீ வேகத்தில் பந்துவீசுவது என்பது முடியாது எனக் கூறப்பட்டது. வேகத்தைக் கூட்ட நிறைய திறமை வேண்டும். பும்ரா நம்பமுடியாத வகையில் விளையாடி வருகிறார்" என கபில்தேவ் பேசியுள்ளார்.

No comments

Latest Articles