ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்த காரணத்தால் ஸ்ரீலங்காவுக்கு பயணங்களை மேற் கொள்ளலாமென தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்...
ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்த காரணத்தால் ஸ்ரீலங்காவுக்கு பயணங்களை மேற் கொள்ளலாமென தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது நெதர்லாந்து அரசு.
இது தொடர்பாக நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு நிலைமையில் முன்னேறம் காணப் படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மக்களின் வாழ்க்கை நிலை வழமைக்குத் திரும்புகிறது.
பயண ஆலோசனை ஒரேஞ்சிலிருந்து மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்படுகிறது.
நெதர்லாந்தில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் ஸ்ரீலங்காவில் மாறுபட்டு காணப்படும் எனவும், எனவே பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் பல நாடுகள் தமது பிரஜைகளுக்கு அத்தியாவசிய தேவை தவிர்த்து மேலதிகமாக ஸ்ரீலங்காவுக்கு பயணத்தை மேற்கொள்ளவேண்டாமென அறிவுறுத்தியிருந்தன.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளை அழைத்து பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் பயணத்தடையை நீக்குமாறு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து சீனா,இந்தியா,சுவிற்சர்லாந்து இத்தாலி மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் பயணத்தடையை தளர்த்திய நிலையில் தற்போது நெதர்லாந்தும் பயணத்தடையை தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments