Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஐஸ் போதைப் பொருள் மற்றும் 7 லட்சம் ரூபா பணத்துடன் யாழில் இளைஞர் கைது!

ஐஸ் என்ற போதைப்பொருள் மற்றும் 7 லட்சம் ரூபா பணத்துடன், ஆவாகுழு உறுப்பினர் ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வுல்வெட...


ஐஸ் என்ற போதைப்பொருள் மற்றும் 7 லட்சம் ரூபா பணத்துடன், ஆவாகுழு உறுப்பினர் ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வுல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சக்தி என்ற இளைஞரே நேற்று (31) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வுல்வெட்டித்துறை பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சக்தி என்ற நபரின் வீட்டை சோதனையிட்ட போதே, 4 கிராம் கஞ்சா மற்றும் 3 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருள் உட்பட 7 லட்சம் ரூபா காசு மற்றும் வங்கி பற்றுச்சீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த இளைஞர் சக்தி என்ற பெயருடன் வாள் வெட்டுக் குழுவை நடத்தியதாகவும், பல வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர் என்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும், விசாரணையின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Latest Articles