Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சட்டவிரோத கற்றாழை வியாபாரம் -சிக்கினர் இருவர்!

ஒருதொகை கற்றாழைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை, கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று முன்தினம் (18) கைதுசெய்துள்ளனர். சட...


ஒருதொகை கற்றாழைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை, கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று முன்தினம் (18) கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் பிடுங்கப்பட்ட கற்றாழைகளை லொறியொன்றில் ஏற்றிக் கொண்டு சென்றபோதே, இச்சந்தேக நபர்களை வங்காலை பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கைதுசெய்துள்ளனர்.

வங்காலை காட்டுப்பகுதியில் பிடுங்கப்பட்ட இக்கற்றாழைகள் 18 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், சுமார் 510 கிலோகிராம் நிறையுடையாக இக்கற்றாழைகள் காணப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

மன்னார், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 39, 36 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

No comments

Latest Articles