Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி திரிந்தவர் கவரிங் நகைகளுடன் கைது!

கவரிங் நகைகள் விற்பனைக்குக் கொண்டு வந்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (21)கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வ...


கவரிங் நகைகள் விற்பனைக்குக் கொண்டு வந்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (21)கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர் ஒருவரையே கைது செய்துள்ளனர்.

36 வயதுடைய இந்த இளைஞர் குளியாப்பிட்டியில் இருந்து, யாழ்ப்பாணம் பஸார் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய வந்த வேளையிலேயே சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Latest Articles