Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சுற்றுலா வீசாவில் வந்த இரு இந்தியர்கள் யாழில் செய்த செயல்! பிடித்துச் சென்ற பொலிஸார்!!

இந்தியாவிலிருந்து சுற்றுலா வீசாவில் வருகைதந்து நகைத் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்திய பிரசைகளை இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது...


இந்தியாவிலிருந்து சுற்றுலா வீசாவில் வருகைதந்து நகைத் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்திய பிரசைகளை இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவிலில் இருந்து மூன்று மாத சுற்றுலா வீசாவில் இரு இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்றும் அவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைகள் செய்யும் தொழிலகத்தில் நகை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்று விசாரணைகளை நடத்தியபோது அவர்கள் சுற்றுலா வீசாவில் வந்து தொழிலில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments

Latest Articles