Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஆற்று நீர் கறுப்பு நிறமாக மாறியதால் மக்கள் அதிருப்தி!

டிக்கோயவில் இருந்து காசல் ரீ நீர்தேக்கம் வரை நீர் ஏந்திசெல்லும் டிக்கோயா ஆற்றில் தொழிற்சாலையின் கழிவு தேயிலை கலக்கபட்டதால் நீர் கறுப்பு...


டிக்கோயவில் இருந்து காசல் ரீ நீர்தேக்கம் வரை நீர் ஏந்திசெல்லும் டிக்கோயா ஆற்றில் தொழிற்சாலையின் கழிவு தேயிலை கலக்கபட்டதால் நீர் கறுப்பு நிறமாக மாற்றம் பெற்றுள்ளதால் மக்கள் அதிரிப்தி அடைந்துள்ளனர்.

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பகுதியில் இருந்து காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் டிக்கோயா ஆற்றில் கழிவு தேயிலை கலக்கபட்டுள்ளமையால் ஆற்றின் நீர் கருப்பு நிறமாக மாற்றம் பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த சம்பவம் 17.05.2019 வெள்ளிகிழமை மாலை 03 மணி அளவில் இடம்பெற்றதாக அட்டன் பொலிஸார்

தெரிவித்தனர்.

டிக்கோயா பகுதியில் உள்ள மக்கள் தமது அன்றாடம் தேவைக்கு பயன்படுத்தும் குறித்த டிக்கோயா ஆற்றில் கழிவு தேயிலை கலக்கபட்டமையினால் பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் அட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை தொடர்ந்து அட்டன் பொலிஸாரால் நன்னீர் மீன்பிடி அதிகார சபைக்கு அறிவிக்கபட்டமை தொடர்பிலும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதிகாரிகள் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை கடந்த முறையும் குறித்த ஆற்றில் இவ்வாறான கழிவு தேயிலை கலக்கப்பட்டமை தொடர்பில் தோட்ட முகாமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

No comments

Latest Articles