Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

காதலிக்கு திருமண ஏற்பாடுகள்! கழுத்தை வெட்டி கொலை செய்து உடலை எரித்த காதலன்!

பொலனறுவை - புலஸ்திபுர பகுதியில் காதலியை பெற்றோல் ஊற்றி எரித்த காதலனை பொலிஸார் கைது செய்துள் ளனர்.  கடந்த 12ஆம் திகதி காணாமல் போன ய...


பொலனறுவை - புலஸ்திபுர பகுதியில் காதலியை பெற்றோல் ஊற்றி எரித்த காதலனை பொலிஸார் கைது செய்துள் ளனர். 

கடந்த 12ஆம் திகதி காணாமல் போன யுவதி ஒருவரின் சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் பொலனறுவை - லக்ஷ உயன பிரதேசத்தின் வயல் வெளியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது யுவதியின் முழு உடலுமே எரிக்கப்பட்ட நிலையில், எலும்புகள் சிலவே எஞ்சியிருந்துள்ளன.

இது தொடர்பில் குறித்த பெண்ணின் காதலன் என சந்தேகிக்கும் நபரை கைது செய்j பொலிஸார் அவரிடம் விசார ணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யுவதியின் காதலனான சந்தேகநபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதுடன் அவருக்கு ஒரு பிள்ளையும் உள்ளது என யுவதிக்கு தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில் யுவதிக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்த சந்தேகநபர், யுவ தியை அழைத்து தனியாக பேசவேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும், யுவதி சந்தேகநபரை கடந்த 10 ஆம் திகதி சந்தித்துள்ளதுடன், இதன் போதே யுவதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின் யுவதியின் உடலை பெற்றோல் இட்டு சந்தேகநபர் எரித்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 28 ஆம் திகதிவரை அவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments

Latest Articles