இலங்கை காடுகளிற்குள் அமெரிக்க இராணுவம் என்ன செய்கிறது!! இலங்கைக்குள் அமெரிக்க இராணுவத்தை வர விடுவது சரியா, பிழையா என்ற விவாதம் ஒர...

இலங்கை காடுகளிற்குள் அமெரிக்க இராணுவம் என்ன செய்கிறது!!
இலங்கைக்குள் அமெரிக்க இராணுவத்தை வர விடுவது சரியா, பிழையா என்ற விவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இலங்கைக்குள் அமெரிக்க இராணுவம் வந்து விட்டதா என்றதொரு சந்தேகம் நிலவி கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க இராணுவம் இலங்கையில் பயிற்சி பெறுவது போன்றதொரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
குறித்த புகைப்படத்தால் அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைந்து விட்டதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
அப்படியாயின் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர, இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ தளம் ஒன்றை அமைக்க இலங்கை அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மையா என்ற கேள்வியும் எழுகிறது.
அதிலும் குறிப்பாக இராணுவ தளமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக அமெரிக்க தூதரகமும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்திய போது, அமெரிக்க இராணுவ முகாமை திருகோணமலையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.


No comments