Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

விஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்!

நடிகர் விஜய் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து அவர்களை ஆரம்பகட்ட பணிகளையும் ஆரம்பித்து...


நடிகர் விஜய் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து அவர்களை ஆரம்பகட்ட பணிகளையும் ஆரம்பித்துவிட கூறிவிடுவார். எனவே ஒரு படம் முடிந்த பின்னர் ஒரு சிறிய இடைவெளியில் ஓய்வு எடுத்து மீண்டும் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுவிடுவார்.

ஆனால் தற்போது விஜய் தனது 63வது படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே, 64வது, 65வது, 66வது என மூன்று பட இயக்குனர்களையும் அவர் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதாவது விஜய்யின் 64வது படத்தை 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் தற்போது இயக்கி வரும் 'கைதி' படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் 'விஜய் 64' படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிடுவார் என தெரிகிறது.

இந்த நிலையில் விஜய்யின் 65வது படம் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உதவிடும் வகையில் அவருடைய தயாரிப்பில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும் இந்த படம் செண்டிமெண்ட் கலந்த குடும்ப படம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் விஜய்யின் 66வது படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கவுள்ளார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும், முழுக்க முழுக்க இந்த படம் காதல், காமெடி இல்லாத ஒரு ராவ்வான படம் என்றும் கூறப்படுகிறது.

ليست هناك تعليقات

Latest Articles