Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மதுபோதையில் பொலிஸார் அடாவடி! தாதியர்களை நோக்கி தகாத வார்த்தை பிரயோகம்!

சுன்னாகம் பகுதியில் இரு பொலிஸார் மது போதையில் உந்துருளியை செலுத்தி விபத்திற்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...


சுன்னாகம் பகுதியில் இரு பொலிஸார் மது போதையில் உந்துருளியை செலுத்தி விபத்திற்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சுன்­னா­கம் பகு­தி­நோக்கி உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இரு பொலி­சா­ரும் மது­போ­தை­யில் உந்­து­ரு­ளி­யைச் செலுத்திச் சென்­ற­தோடு வீதி­யில் பய­ணித்த பெண் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரை­யும் மோதித்­தள்­ளியுள்ள­னர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவரும் பலாலிப் பொலி­ஸார் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் வீதி­யில் வீழ்ந்து படு­கா­ய­ம­டைந்த நிலையில் தெல்­லிப்­பழை வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்­ட­னர். இரு பொலிசா­ரும் வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்ட சம­யம் அதகளவான போதை­யில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் வைத்தியசாலையில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளு­ட­னும் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­தாக வைத்தியசாலை வட்டரத்தால் தகவல் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அங்கு பணி­பு­ரி­யும் சிங்­க­ள­மொழி தாதி­யர்­கள் உதவ முற்­பட்­ட­போ­தும் அவர்­க­ளை­யும் தகாத வார்த்­தை­க­ளால் ஏசி­ய­தால் குறித்த தாதி­யர்­க­ளும் ஒதுங்­கிக் கொண்­ட­னர். இந்த விட­யம் வைத்தியசாலை­யின் பணிப்­பா­ள­ரின் கவ­னத்­துக்­கும் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Latest Articles