Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

எங்கள் தலைவர் பிரபாகரன் வழியில் பயணிக்கிறோம்: சீமான் நம்பிக்கை!

தமிழர்களின் தார்மீக உரிமைகளுக்காக ஓயாது களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியும் எதிர்வரும் காலங்களில் தவிர்க்க இயலாத சக்தியாய் மாறும் ; இன்...

தமிழர்களின் தார்மீக உரிமைகளுக்காக ஓயாது களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியும் எதிர்வரும் காலங்களில் தவிர்க்க இயலாத சக்தியாய் மாறும் ; இன்றைக்கு எந்த மக்களால் தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்படுகிறோமோ அவர்களே ஒருநாள் எங்களை தூக்கி கொண்டாடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக புதுவை உள்ளிட்ட நாற்பது மக்களவை தொகுதிகளிலும் தனித்து களம் கண்டுள்ளது நாம் தமிழர் கட்சி. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரத்தால் தேர்தல் களம் அனல் தகித்துக்கொண்டிருக்க, தமது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார் சீமான்.

நாங்கள் எந்த அளவுக்கு பிரச்சாரம் மேற்கொண்டாலும் தேர்தல் சமயங்களில் வாக்கு பிற கட்சிகள் பணம் கொடுப்பது கடுமையான மன சோர்வினை உண்டாக்கும். ஆனால், அதையெல்லாம் கடந்து எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணம் என்றாலும் ஒரு காலடித் தடத்துலதான் தொடங்கியாக வேண்டும் என்ற எங்கள் தலைவர் பிரபாகரன் வழியில் பயணிக்கிறோம். நாம் தமிழர் கட்சியும் எதிர்வரும் காலங்களில் தவிர்க்க இயலாத சக்தியாய் மாறும் ; இன்றைக்கு எந்த மக்களால் தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்படுகிறோமோ அவர்களே ஒருநாள் எங்களை தூக்கி கொண்டாடுவார்கள் என தேர்தல் சூழல் குறித்தும், நாம் தமிழர் கட்சி குறித்தும் கருத்து பகிர்ந்துள்ளார் சீமான்.

No comments

Latest Articles