கிளிநொச்சியில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட 6 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்று மாலை ஆ...
கிளிநொச்சியில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட 6 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந் நிலையில் சந்தேக நபர்களை இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியோது அவர்களை எதிர்வரும் மே மாதம் 3 திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ليست هناك تعليقات