பதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை ...
பதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை புதன் கிழமை காலை மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவர் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து பின்னணி..
திருகோணமலையிலிருந்து தியத்தலாவ நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும், மஹியங்கனையிலிருந்து பயணித்த வேன் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது.
மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக புதன் கிழமை அதிகாலை 1.30 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மட்டக்களப்பை சேர்ந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களாவர்.
விபத்தில் காயமடைந்த 13 மற்றும் 16 வயதான சிறுமிகள் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ليست هناك تعليقات