Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் புதுவருடத்தன்று இடம்பெற்ற பெரும் சோகம் - மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபச் சாவு!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை 2 ஆம் குற...

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த 38 வயதுடைய ம.புவிகரன் என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.a

No comments

Latest Articles