கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களால் நாடே அல்லோலகல்லோலப்பட்டுள்ளது. மிலேச்சத்தனமான குறித்த குண்டு வெடிப...
மிலேச்சத்தனமான குறித்த குண்டு வெடிப்பு தாக்குதலால் 321 அப்பாவி பொது மக்களின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்துடன் 400 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நாட்டில் அண்மைக்காலமாக தினம் தினம் இறப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. குறிப்பாக புதுவருடத்திற்கு பின்னர் விபத்துக்கள் மின்னல் தாக்குதல் என பல உயிர்கள் பலியாகியுள்ளன. இதனால் நாடே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நாட்டில் மின்னல் தாக்கத்தால் பலர் பலியாகியுள்ளதால் மின்னல் தாக்கத்திலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய வகையில் செயற்படவேண்டியது கட்டாயமாகும்.



ليست هناك تعليقات