Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இறந்து 25 வருடங்களின்பின் இன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியை வந்தடைந்த சடலம்!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் இறந்த ஈழத் தமிழர் ஒருவரது உடலம் சொந்தவூரான யாழ்ப்பாணத்தை இன்று அதிகாலை வந்தடைந்துள்ளது. ...

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் இறந்த ஈழத் தமிழர் ஒருவரது உடலம் சொந்தவூரான யாழ்ப்பாணத்தை இன்று அதிகாலை வந்தடைந்துள்ளது.

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்றீபன் யோகி என்பவரது உடலமே இவ்வாறு உறவினர்களால் எடுத்துவரப்பட்டுள்ளது.

இவர், இத்தாலி நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில், கடந்த 1994 ம் ஆண்டு மே மாதம் 24 ம் திகதி நோயினால் பீடிக்கப்பட்டு தனது 49 வது வயதில் மரணமடைந்தார்.

ஆனாலும் அப்போது இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் இறந்தவரின் உடலினை இலங்கைக்கு கொண்டுவரமுடியாத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் யுத்தம் எப்போது முடிவடையும் என்றும் தெரியாத காரணத்தினால் இத்தாலியில் இருந்த அன்னாரது உறவினர்கள் 25 ஆண்டுகளுக்கு உடலினை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

எவ்வாறாயினும் இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகளைத் தொட்டபோதும் உடலத்தைப் பொறுப்பேற்பதில் சிக்கல் நிலைகள் காணப்பட்டன. மேலும், இறந்தவரது மனைவி இத்தாலிக்குச் சென்று கணவரின் உடலத்தைப் பார்வையிட்டுள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது.

தற்போது 25 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் இறந்தவரின் உடலம் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.


1 comment

Latest Articles