Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்? பிரதேசத்தில் பதற்றம், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!

பாணந்துறை சரிக்கமுல்ல திக்கல பகுதியில் வாகன விபத்துச் சம்பவம் ஒன்றையடுத்து முஸ்லிம் இளைஞரின் வீடு ஒன்று சிங்களவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்த...

பாணந்துறை சரிக்கமுல்ல திக்கல பகுதியில் வாகன விபத்துச் சம்பவம் ஒன்றையடுத்து முஸ்லிம் இளைஞரின் வீடு ஒன்று சிங்களவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் இருதரப்புகளுக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதல்களால் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த பிரச்சினையில் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி - மற்றும் பௌசி எம் பி ஆகியோர் தலையிட்டு சுமுக நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உடனடியாக பிரதமரின் பணிப்பில் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

காயமடைந்த முஸ்லிம்களை வைத்தியசாலையில் அனுமதிக்க சிலர் இடையூறு விளைவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை விபத்து மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Latest Articles