யாழ்பாணத்தில் இருந்து பொன்னாலை வரையிலும் யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை (AB21 ) வீதி காப்பற் சாலையாக தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மா...
யாழ்பாணத்தில் இருந்து பொன்னாலை வரையிலும் யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை (AB21 ) வீதி காப்பற் சாலையாக தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி குறித்த வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைக்கு செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
மூலோபாய வியூக வீதி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழான உப திட்டமாக இந்த வீதியினைப் புனரமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து பொன்னாலை வரையிலும் AB21 வீதியில் 1.83 கிலோமீற்றர் தொடக்கம் 14.6 கிலோமீற்றர் வரையிலான வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான சிவில் பணி ஒப்பந்தம், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய, வரையறுக்கப்பட்ட Sierra construction நிறுவனத்திடம் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை குறித்த வீதியின் மிகுதிப் பகுதியான பொன்னாலையிலிருந்து பருத்தித்துறை வரையான சாலை இந்தியாவின் உதவியுடன் இந்திய நிறுவனம் ஒன்றினால் புனரமைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாணக் கிளை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் நகரிலிருந்து பொன்னாலைவரையான சாலை உலக வங்கியின் உதவியுடன் புனரமைக்கப்படவுள்ளமை தெரிந்ததே.
யாழ்ப்பாணத்தின் மிக நீளமான சாலையாகவும் இலங்கையின் கரையோரச் சாலைகளில் ஒன்றாகவும் விளங்குகின்ற இந்த வீதியானது மிகவும் முக்கியமான மையங்களை இணைக்கும் சாலையாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments