Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயளியிடமிருந்து ஹெரோயின் மீட்பு!

தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப...

தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

போதைப் பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் ஒருவரை அதிலிருந்து மீட்பதற்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவரிடம் இருந்து சிறிய பொதி ஒன்று இருந்துள்ளது. அது என்னவென்று அருகில் இருந்தவர்கள் கேட்டபோது ஹெரோயின் என்று கூறியதுடன், அதைக் காண்பித்தும் உள்ளார்.

இது தொடர்பாகப் பொலிஸாருக்கு இரகசியமாகத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

அவரிடம் இருந்து சிறிய 3 பொதிகளில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதையடுத்து அந்த நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

ليست هناك تعليقات

Latest Articles