கடந்த சிவராத்திரி தினத்துக்கு முதல்நாள் திருக்கேதீஸ்வரத்தின் ஆலய வீதியில் அலங்கார வளைவு நிர்வாகம் மற்றும் தொண்டர்களால் அமைக்கப்பட்டுக்கொண்ட...
கடந்த சிவராத்திரி தினத்துக்கு முதல்நாள் திருக்கேதீஸ்வரத்தின் ஆலய வீதியில் அலங்கார வளைவு நிர்வாகம் மற்றும் தொண்டர்களால் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த போது பங்குத் தந்தையர் சகிதம் கத்தோலிக்க மக்களால் அகற்றப்பட்டது. பின்னர் நிர்வாகத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர் அதற்கு அமைவாக வழக்கினை விசாரித்த மன்னார் பதில் நீதவான் கயஸ் பல்டானோ திருவிழா நடைபெறுவதனால் திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் மீண்டும் அலங்கார வளைவு அமைப்பதற்கு நான்கு நாட்களுக்கு அனுமதி அளித்திருந்தார் அந்த வகையில்இன்று(7) மாலை ஐந்துமணியளவில் திருக்கேதீஸ்வரம் ஆலய நிர்வாகத்தினரும் தொண்டர்களும் இணைந்து அலங்கார வளைவினை அகற்றினர்.
இதன்போது அன்பே சிவம் என்னும் நாமத்துக்கு இசைவாக நீதிமன்ற தீர்ப்பை மதித்து திருக்கேதீஸ்வரம் வீதியில் அமைத்திருந்த அலங்கார வளைவை தற்காலிகமாக அகற்றுவதாக சிவத்தொண்டர்கள் தெரிவித்தனர்.
கடந்த நான்காம் திகதியில் இருந்து இன்றுவரை அவ்விடத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இது சம்பந்தமான வழக்கானது நாளைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments